Tag: K.R. Prabhu
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் வழங்கும் LKG…
'நகைச்சுவை' யாரும் செய்து விட முடியும், ஆனால் அரசியல் நையாண்டி படங்களை எடுக்க நல்ல கதை மற்றும் சரியான பேக்கேஜிங் தேவைப்படும். அப்போது தான் பெரிய அளவு பார்வையாளர்களை சென்றடையும். ஆர்.ஜே. பாலாஜியின் LKG படத்தின் சிங்கிள் பாடலான "எத்தனை காலம் தான்' பாடல் நம்பமுடியாத வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இது YouTube பார்வைகள், சமூக ஊடகங்கள் தாண்டி ரேடியோ ஸ்டேஷன்களிலும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. நையாண்டியான விஷயங்களை கொண்டிருந்த இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. வெளியான சில மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்திருப்பது என்பது மிகவும் சுவாரசியமான தகவல்.
இது குறித்து இயக்குனர் கே.ஆர் பிரபு கூறும்போது, "ட்ரைலருக்கு எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். உண்மைய...



