தைப்பூசம் திருநாளில் வெளியாகும் “கபடதாரி” !
சிபிராஜ் நடிப்பில் உருவாகி, சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ள “கபடதாரி” திரைப்படம், வரும் தைப்பூசம் பண்டிகை திருநாளான 2021, ஜனவரி 28 அன்று வெளியாகிறது. படதயாரிப்பு, பட விளம்பரம் முதலான படம் பற்றின அத்தனை விசயங்களும், ரசிகர்களை கவரும் வகையில் நிகழ்ந்து வருகிறது. சூர்யா முதல் ஏ ஆர் ரஹ்மான் வரை தங்கள் ஆதரவு கரம் நீட்டி வெளியிட்ட பட புரமோக்களும், அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கும் விஷுவல்களும், “கபடதாரி” படத்தினை இக்காலகட்டத்தின் மிக முக்கிய படைப்பாக மாற்றியிருக்கிறது. பொதுவாக ரிமேக் படங்கள் மீது பலத்த எதிர்பார்ப்பும், பல நேரங்களில் முதல் படத்துடன் பெரும் ஒப்பிடலும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். தமிழில் “கபடதாரி” நிறைய மாற்றங்களை அடைந்துள்ளது “காவலுதாரி” பார்த்த ரசிகர்களுக்கும் இப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இதில் குறிப்பிடதகுந்த அம்சம் என்னவெனில் ஒரிஜினல் படத்தின் இயக்குநரும் திரைக்கதை ஆ...
