’கபடதாரி’ படத்தின் பின்தயாரிப்புப் பணிகள் தொடங்கின!
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும்
அளவுக்கு தரமான படங்களை தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். திரை விமர்சகராக தேசிய விருது
பெற்றதோடு, சினிமாவின் விளம்பர நுணுக்கங்களையும் நன்கு அறிந்த தயாரிப்பாளராக திகழும் தனஞ்செயன்,
‘கொலைகாரன்’ வெற்றியை தொடர்ந்து ‘கபடதாரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
சிபிராஜ், நந்திதா ஸ்வேதா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட
பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, பிரபல கன்னட நடிகை சுமன் ரங்கநாதன் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில்
நடிக்கிறார்.
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா
பிரச்சினையால் பின்னணி வேலைகள் தொடங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு சி...
