Wednesday, September 30

Tag: kadaisi echarikai

6 விருதுகளை அள்ளிய ‘கடைசி எச்சரிக்கை’!

6 விருதுகளை அள்ளிய ‘கடைசி எச்சரிக்கை’!

News
6 விருதுகளை அள்ளிய கடைசி எச்சரிக்கை.... இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட்டார்! சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கடைசி எச்சரிக்கை எனும் 23 நிமிட குறும்படத்தை இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்கள் இன்று வெளியிட்டார். சுகுமார் கணேசன் எழுதி இயக்கியுள்ள படம் கடைசி எச்சரிக்கை. மனிதனின் உணவுப் பழக்கம், சுற்றுச் சூழல் சீர்கேடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் கடைசி எச்சரிக்கை. 23 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் நாயகனாக சன் டிவி புகழ் டவுட் செந்தில் நடித்துள்ளார். அவருடன் நெல்லை சிவா, அமிர்தலிங்கம் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை முன்னணி ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்கள் வெளியிட, முன்னணி மற்றும் முன்னோடித் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு அவர்கள் டீசரை வெளியிட்டு வாழ்த்தினார். படத்தின் ட்ரைலரை இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை...