“அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான்” – அமைச்சர் கடம்பூர் ராஜு!
அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான் பேய்மாமா இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு..
பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் சக்திசிதம்பரம் இயக்கியுள்ள படம் பேய்மாமா. யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக உருவாகி இருக்கிறது. நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது..
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா அவர்களை வணங்குகிறேன். இங்கு பேசியவர்கள் இந்த அரசு சினிமாத்துறைக்கு நிறைய செய்கிறது என்று சொன்னார்கள். என்னை அம்மா நியமித்ததே அதற்காகத் தான். செய்தி விளம்பரத்துறை என்பது பெரிய ஜாம்பவான்கள் வசித்த துறை . நாங்கள் எல்லாம் படம் ...
