மிரட்டலான பேய் படம் ‘காதம்பரி’!
அறிமுக இயக்குனர் அருள் இயக்கி தயாரித்து மற்றும் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஒரு பேய் படம் காதம்பரி.
கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி மேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா ,மகாராஜன்
மற்றும் முருகானந்தம் ஆகியோர்களும் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு இயக்கியிருக்கும் படம் காதம்பரி.
இதைப் பற்றி இயக்குனரிடம் பேசிய பொழுது, தான் இந்த கதையின் தலைப்பை நயன்தாரா நடித்த விக்னேஷ் சிவன் இயக்கிய சில வருடங்களுக்கு முன்பு வெளியான நானும் ரவுடிதான் படத்திலிருந்து நயன்தாராவின் பெயர் காதம்பரி யை படத்தின் தலைப்பாக வைத்துள்ளதாக கூறினார். முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகி இருப்பதாகவும் கதை ஆந்திரா அருகிலுள்ள ஒரு அடர்ந்த காட்டில் நடப்பதாகவும் ஒரே ஒரு வீட்டிற்குள் நடக்கும் கதையாகவும் அமைத்துள்ளதாக கூறினார். குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு குறைந...
