மக்கள் மனதை தொடப்போகும் படம் ‘தொடாதே’!
பெரும்பாலான கொலை மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் 'போதையில் செய்து விட்டேன்' என்பதே அவர்களின் வாக்குமூலமாக . இருக்கிறது. நடுத்தரக் குடும்பத்திற்கும் கீழான மக்களின் வருமானம் மதுபானக் கடைகளில் சீரழிகிறது. அதை மக்கள் புரிந்து, குறைந்த பட்சமாவது திருந்த வேண்டும் என்கிற நோக்கில், ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் அலெக்ஸ் "தொடாதே" எனும் படத்தை இயக்கியிருக்கிறார். கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரித்துள்ளார்.
நடிகர் 'காதல்' சுகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அலெக்ஸ் இயக்குகிறார். ஒளிப்பதிவு ராஜேஷ், இசை ராஜா, பாடல்கள் பூமாதேவி, பாலமுருகன், ஜெயக்குமார், இணை இயக்கம் நாகேந்திரன், உதவி இய...
