தும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி!
பெண்புலி தும்பா மற்றும் அதன் காட்டு நண்பர்களை வசீகரிக்க, ஒரு புதிய விருந்தினர் சேர்ந்திருக்கிறார். அவருக்கு காடுகள் தான் இரண்டாவது வீடு, அவரது படங்களான 'பேராண்மை' மற்றும் 'வனமகன்' போன்ற திரைப்படங்களுக்காக அவர் நீண்ட காலமாக அங்கு தங்கி இருக்கிறார். இப்போது அவர் மிகவும் ஜாலியான இந்த 'தும்பா' படத்திலும் இணைந்திருக்கிறார். ஆம்! உயரமான, அழகான ஹீரோ ஜெயம் ரவி, இந்த குழந்தைகளை மையப்படுத்திய படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இது குறித்து தயாரிப்பாளர் சுரேகா நியாபதி கூறும்போது, "இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜெயம் ரவி நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அவருடைய நட்சத்திர அந்தஸ்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது, தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற ஒப்புக் கொண்...

