மெய்நிகர் அஞ்சலி – கலாம் சலாம்!
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், அணு விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களுடனான நினைவுகளை உலகநாயகன் பத்ம பூஷன் கமல் ஹாசன் அவர்கள் மெய்நிகரி மூலம் பகிர்ந்துகொண்டு அஞ்சலி செலுத்த இருக்கிறார்.
மக்களின் ஜனாதிபதி திரு.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் மறைந்த 5-ம் ஆண்டு தினத்தில் டிஜிட்டல் ஊடகம் மூலம் மெய்நிகர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வை ரெயின்ட்ராப்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். ரெயின்ட்ராப்ஸ் அமைப்பானது டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சர்வதேச அமைப்பு மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் அவர்களின் இல்லத்தினருடன் இணைந்து நம் நாட்டின் 11வது ஜனாதிபதியாக பதவி வகித்த திரு. ஏபி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜீலை 27ந்தேதி மாலை 7 மணிக்கு "கலாம் சலாம்" என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மெ...
