காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ’நிலா வரும் வேளை’!
மிராக்கிள் மூவிஸ் ஸ்ருதி நல்லப்பா வழங்கும் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ’நிலா வரும் வேளை’ - பீரியட் சூப்பர்நேச்சுரல் த்ரில்லராக பிரமாண்டமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு பாலக்காட்டில் பூஜையுடன் தொடங்கியது!
நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது வசீகரம் மற்றும் நடிப்புத் திறமையால் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளார். நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து திறமையான நடிப்பால் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்கியவுடன் காளிதாஸ் ஜெயராம் தனது சினிமா பயணத்தைப் புதிய உயரத்திற்கு உயர்த்தும் நோக்கத்தில் இனி கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற முடிவு எடுத்துள்ளார். அவரது இந்த முடிவு தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா தலைமையிலான மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமான மிராக்கிள் மூவிஸ் மூலம் நிறைவேறியுள்ளது. இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பாலக்காட்டில்...

