“கல்தா” இசை வெளியீட்டு விழா !
மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் திரைப்படம் “கல்தா”. மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் சமூக நோக்குடன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இச்சந்திப்பில் நடிகர் கருணாநிதி பேசியதாவது...
இந்த படம் ஒரு சமூகப்படம் இந்தப்படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன். வைரஸ் எப்படி உருவாகிறது என்பதை இப்படத்தில் எடுத்திருக்கிறோம். சமூக பிரச்சனையை இந்தப்படத்தில் எடுத்துள்ளோம்.இந்தப்படத்தை அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டும் எனக்கேட்டு கொள்கிறேன் நன்றி.
நடிகர் ராதாரவி பேசியது....
“கல்தா” படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். இந்தப்படம் நன்றாக இருக்கும் என டிரெய்லரிலேயே தெரிகிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். அருமையான நடிகர். தயாரிப்பாளர்களை அணுசரி...
