“அறிவும் அன்பும்”
உலகலாவிய அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு நேரத்தில் திரு.கமல் ஹாசன் அவர்கள் தனித்துவமிக்க ஒரு பாடலை இயற்றியிருக்கிறார். இப்பாடல் மக்களிடம் நம்பிக்கையையும் நல்லெண்ணங்களையும் பரவச்செய்யும்.
நடிகர் மற்றும் அரசியல்வாதியான திரு.கமல் ஹாசன், இந்திய நாடு கொரோனா தொற்றினை கையாளும் விதம் குறித்து தொடர் குரல் எழுப்பி வருகிறார்,
அவ்வகையில் இம்முறை இச்சூழலுக்கேற்ப ஒரு பாடலை இயற்றி, பாடி, இயக்கியும் உள்ளார். கடினமான இச்சூழலில், “அறிவும் அன்பும்” என்கின்ற அப்பாடல் நம்பிக்கையையும் நேர்மறை எண்ணங்களையும் மக்களின் மனதில் விதைக்கும்.
இப்பாடலை மேலும் சிறப்பாக்கும் வண்ணம் திரையுலகின் மிகப்பெரும் கலைஞர்கள் அனைவரும் பெரும் குதூகலத்துடன் உடனே சம்மதித்து பாடுவதற்கு ஒப்புக்கொண்டனர்,
கமல் ஹாசன் அவர்களுடன் இணைந்து அனிருத் ரவிச்சந்திரன், யுவன் ஷங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத்,ஷங்கர் மஹாதேவன்,ஸ்ரு...
