மெய்நிகர்ஆன்லைன் உலகில் புதிய அவதாரமெடுக்கும் கமல்ஹாசன்!
தன் பிறந்த நாளன்று, ∴பாண்டிக்கோ என்ற கம்பெனி துவக்கும் மெய்நிகர் ஆன்லைன் உலகில் (மெட்டாவெர்ஸில்) இணையதள அவதாரமாகும் முதல் இந்திய நடிகராகிறார் பத்மஸ்ரீ.கமல்ஹாசன் அவர்கள்.
இந்த புதிய முயற்சியில், கமல் ஹாசன் முதன் முறையாக, லோட்டஸ் மீடியா என்டர்டைன்மெண்ட் கம்பெனி மூலம் ∴பாண்டிக்கோவுடன் இணைந்து தன் டிஜிட்டல் அவதாரங்களையும், NFT (Non fungible Token) சொத்துக்களையும் மெய்நிகர் ஆன்லைன் உலகில் (மெட்டாவெர்ஸில்) பிரத்யேகமாக வெளியிடுகின்றார். இவை www.kamal.fantico.in எனும் இணைய தளத்தில் துவங்கப்படும்.
∴பாண்டிக்கோ கம்பெனி துவக்கும் ஒரு கேம் சார்ந்த மெட்டாவெர்ஸில், கமல்ஹாசனுக்கென்று தனி உலகம் இருக்கும். இதில் உலகெங்கும் இருக்கும் அவர் ரசிகர்கள் அவருடனும் அவரின் டிஜிட்டல் அவதாரங்களுடனும் அளவளாவி, அதன் நினைவாக டிஜிட்டல் டோக்கன்கள் மற்றும் நினைவு சின்னங்களையும் வாங்கலாம்.
அவருடைய மெய்நிகர் உலகின் வ...
