“கணம் படத்தில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன்” – நடிகை அமலா
கணம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது:
கவிஞர் மதன் கார்க்கி பேசும்போது,
இளமையும் புதுமையும் கலந்த மேடை. நீண்ட நாள் கழித்து அமலா மேடம் அவர்களை புன்னகை மற்றும் தொழிலைத் திரையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஸ்வரம் பாடியது சிறப்பாக இருந்தது. அழகான பாடலை அவர் பாடிய விதம் இன்னும் அழகாக இருக்கிறது. டைம் ட்ராவல், அறிவியல் புனை கதைகள் கொண்ட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக டைம் ட்ராவல் படங்கள் என்றாலே உலகம் அழியப்போகிறது என்பது போன்ற பெரிய விஷயங்களை தான் பயன்படுத்துவார்கள். ஆனால், பாசத்தை மையமாக வைத்து டைம் ட்ராவல் படத்தை அழகாக நகர்த்த முடியும் என்று இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் திரைக்கதையில் செய்துக் காட்டியிருக்கிறார். இசையில் மெலடியை அழகாக கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலில் பணியாற்றும்போது, நேரத்தை கைப்பற்ற முடிந்தது. அப்படத்தில் 'இன்னும் ந...

