பத்து மொழிகளில் 3டி-யில் உருவாகும் சூரியாவின் 42ஆவது படம் ‘கங்குவா’!
சென்னை: ஏப்ரல் 16, 2023: இந்திய சினிமாவில் 2023-24-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இயக்குநர் சிவா எழுத்து இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து இருக்கக்கூடிய ‘சூர்யா 42’ திரைப்படம் உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இந்தப் படம் குறித்தான அறிவிப்பு, மோஷன் போஸ்டர் வீடியோ என இவை அனைத்தும் படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்தது. ரசிகர்கள் ஒவ்வொருவரும் படத்தின் டைட்டில் என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்.
தற்போது, தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் ‘சூர்யா 42’ படத்தின் தலைப்பை ‘கங்குவா’ என அறிவித்துள்ளது. நெருப்பின் சக்தி மற்றும் வலிமையுள்ள வீரன் என்பது இதன் பொருள். இந்தப் படம் பத்து மொழிகளில் 3டி-யில் உருவாவதால் அனைத்து வகையான பார்வையாளர்களையும் கனெக்ட் செய்யும் வகையிலான தலைப்பு என்பது முக்கியமானது....
