காந்தாரா – விமர்சனம்
காந்தாரா - விமர்சனம்
கே.ஜி.எஃப். படத்தைத் தயாரித்த ஹோம்பாலா பிலிம்ஸ் படைப்பு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்லும் ரசிகர்களுக்கு, எதிர்பார்ப்புகளுக்கு மேல் அமைந்து வித்தியாசமான திரை அனுபவத்தைத் தரும் படம் காந்தாரா என்று ஒரே வரியில் விமர்சித்து விடலாம்.
இந்தியா முழுக்க பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் காந்தாரா கன்னடப் படத்தை டப்பிங் என்று சொல்ல முடியாத வகையில் மிக நேர்த்தியாக தரமான முறையில் தமிழ்ப்படுத்தி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கியிருப்பதும் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாகச் சொல்லலாம்.
நீண்ட காலத்துக்கு முன் ஆட்சி செய்த மன்னர் ஒருவர் மன நிம்மதியின்றி தவிக்கிறார். நிம்மதியைத் தேடிச் செல்லும் நெடிய பயணத்தில், மலைப்பகுதியில் இருக்கும் தெய்வத்தின் முன் மனம் லேசாகி நிம்மதியை உணர்கிறார். இதன் காரணமாக மிகப்பெரிய நிலப்பரப்பை அந்த மலைவாழ் மக்களுக்கு தானமாகத் தருகிறார்.
...
