கார்த்திக் சுப்புராஜ் பாராட்டிய “ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” தொடர்!
“ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” பிரைம் வீடியோ த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்கள், கதைக்கு நம்பகத்தன்மையையும், ஒரு புதிய ஆற்றலையும் கொண்டு வந்திருப்பதாக, முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியுள்ளார்!
முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜின் பிரைம் வீடியோவின் “ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” சீரிஸை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த சீரிஸின் டிரெய்லர் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வைகளைக் குவித்துள்ளதால், இந்த பிரைம் வீடியோ சீரிஸுக்கான, எதிர்பார்ப்பு பெரும் உச்சத்தில் உள்ளது. ஒன்பது எபிசோட்கள் கொண்ட இந்த சீரிஸ், டார்க் ஹ்யூமர் த்ரில்லர், சஸ்பென்ஸ், மர்மம் மற்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் திருப்பங்களுடன் சிலிர்க்க வைக்கும் தொடராக உருவாகியுள்ளது. நவீன் சந்திரா மற்றும் நந்தா தலைமையிலான ஒரு நட்சத்திர நடிகர்கள் குழு இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர், இவர்களுடன் புதிய ஆற்றல் மற்று...

