“நவரசா” திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி உடன் பணியாற்றியது, மறக்க முடியாத வாழ்நாள் அனுபவம்” – இயக்குநர் கார்த்திக் நரேன் !
"நவரசா" திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி உடன் பணியாற்றியது, மறக்க முடியாத வாழ்நாள் அனுபவம் - இயக்குநர் கார்த்திக் நரேன் !
சிறந்த குறும்படங்கள் மூலம் விருதுகளை வென்று, திரைத்துறையில் நுழைந்து கவனம் ஈர்த்த, இயக்குநர் கார்த்திக் நரேன், விரைவில் வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில் "புராஜக்ட் அக்னி" பகுதியினை இயக்கியுள்ளார். தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.
"புராஜக்ட் அக்னி" பகுதியினை இயக்கியது குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் பகிர்ந்துகொண்டதாவது...
"நவரசா' படத்தை பொறுத்தவரை, அதன் அத்தனை அம்சங்களுமே எனக்கு மிகப்பெரும் பாடத்தை கற்றுத்தந்த பெரிய பயணம் ஆகும். சயின்ஸ் பிக்சன் வகையில், ஒரு புதுமையான கனவு முயற்சி தான் இப்படம். இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் அவர்கள் தயாரிக...




