Friday, October 16

Tag: Karunakaran

விதார்த் நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது!

விதார்த் நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது!

News
விதார்த் மற்றும் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி நடிப்பில்,  All in Pictures   சார்பில் T.   விஜய ராகவேந்திரா தயாரிக்கும்   “Production No.6"  படம்  இன்று துவங்கியது! All in Pictures நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் T. விஜய ராகவேந்திரா அவர்கள் கொரில்லா, மசாலா படம் மற்றும் அருண் விஜய் நடித்து விரைவில் வெளியாகவுள்ள  பார்டர் என மிகச்சிறந்த  படங்களை தயாரித்துள்ளார், தற்போது அந்த வரிசையில் விதார்த் , கருணாகரன் மற்றும் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் நடிப்பில் தனது  அடுத்த தயாரிப்பாக  “Production No.6"   தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கான தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனை "உறுமீன்" படப்புகழ் இயக்குனர் சக்திவேல் பெரியசாமி  எழுதி இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஜூலை 16 , 2021  காலை  எளிமையான பூஜையுடன் துவங்கியது....
டார்க் காமெடிவகைப் படமாக உருவாகும் “டிரிப்”!

டார்க் காமெடிவகைப் படமாக உருவாகும் “டிரிப்”!

News
யோகி பாபு , கருணாகரன் இணைந்து நடிக்க உள்ள சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி படமான டிரிப் படம் பற்றிய தகவல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இப்படத்தில் இளமையும், உற்சாகமும் இணைந்த இளம் நாயகி சுனைனா கதைநாயகனாக  அறிமுகமாகும் பிரவீனுக்கு நாயகியாக நடிக்க உள்ளார். நாயகன் பிரவீன் சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தன் திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். தற்போது கதை நாயகனாக இப்படத்தில் மூலம் அறிமுகமாகிறார்.இயக்குநர் டென்னிஸ் சுனைனா பற்றி கூறியது... சுனைனா வின் கதாப்பாத்திரம் மிகவும் சவால் வாய்ந்த ஒன்று. இப்படத்தில் அவருக்கு உணர்ச்சிமிகுந்த பல சவலான தருணங்கள் உள்ளது. இந்தக் கதாப்பாத்திரத்தில் முன்னணி ஹிரோயின்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரை அணுகினோம். ஆனால் யாரும் ஒரு அறிமுக ஹிரோவுடன் ஜோடி சேர விரும்பவில்லை. ஆனா...
சாகசம் + காமெடி =ட்ரிப்

சாகசம் + காமெடி =ட்ரிப்

News
யோகி பாபு கருணாகரன் இருவரும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நாயகர்கள். இருவரும் வேறு வேறு பாதையில் ரசிகர்களை தங்களது தனிப்பட்ட திறமைகள் மூலம் கவர்ந்து தங்களுக்கான தடத்தை பதித்தவர்கள்.  அந்த  வகையில் தற்போது இருவரும் இணைந்து  டார்க் காமெடி கலந்த, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ‌ திரில்லர் படமான “ட்ரிப்” மூலம் ரசிகர்ளை மகிழ்விக்க வருகிறார்கள். “டார்லிங்” , “100” படங்களின் இயக்குநர் சாம் ஆண்டனின் இணை இயக்குநர் டென்னிஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் டென்னிஸ் படத்தினை பற்றி கூறியது.. “ட்ரிப்” திரைப்படம் உல்லாச பயணத்தை அடிப்படையாக கொண்டது. இது ஒரு டார்க் காமெடி கலந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன், திரில்லர். இரண்டு நண்பர்கள் திட்டமிட்ட ஒரு இடத்தை நோக்கி ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள்  வழியில் அவர்கள் சந்திக்கும் இடர்கள்,   அப்பயணத்தை  அட்வெஞ்சராக்குகிற...
முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தால் சிறப்பு பெறும் ஜீவி திரைப்படம்!

முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தால் சிறப்பு பெறும் ஜீவி திரைப்படம்!

News
ஒரு நடிகர் வெற்றியாளராக மாறுவதற்கான யதார்த்தமான காரணி, அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு உண்மையில் அவசியமான பொருத்தமான நடிப்பை வழங்குவது தான். இது தான் கதையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு பிரமிக்க வைக்கும் நடிப்பு தான் நடிகர் வெற்றியினுடையது. "8 தோட்டாக்கள்" படத்தில் அவரது இயல்பான நடிப்பின் சிறப்பம்சமாக மிகவும் கவனிக்கப்பட்டது. தற்போது “ஜீவி” படத்தில் வெற்றியின் மாறுபட்ட நடிப்பு, அதன் காட்சி விளம்பரங்கள் மூலம் பெரிதும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, தனித்துவமான பாணியில் அமைந்த அவரின் வசன உச்சரிப்பு, அவரது உடல்மொழி, நுணுக்கமான நடிப்பின் ஒவ்வொரு அம்சமும் அனைவரையும் ஈர்க்கிறது. ஒரு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த திரைப்படம், ஜூன் 28, 2019 அன்று வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் வெற்றி தேர்ந்தெடுத்த காரணத்தையும், எது அவரை ஈர்த்தது என்பது பற்றியும் கூறுகிறார். அவர் கூறும்போத...
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி ”

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி ”

News
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் " பன்னிக்குட்டி'' . இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் அவர்கள் தயாரிக்கிறார். இப்படத்தில் கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லக்ஷ்மி ப்ரியா , ராமர் , 'பழைய ஜோக்' தங்கதுரை  ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆண்டவன் கட்டளை , 49-0 , கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் 'K' என்கிற கிருஷ்ணகுமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிருமி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் அனுசரனுடன் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளர் சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கம் N .R சுகுமாரன் , படத்தொகுப்பினை M.அனுசரண் மேற்கொள்க...