முதன்முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘கசட தபற’ திரைப்படம்!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘கசட தபற’ திரைப்படம்
சின்னத்திரையில் முதன்முறையாக ஒளிபரப்பாகிறது
~மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5.00 மணிக்கு சிறப்பான வரவேற்பை பெற்ற ‘கசட தபற’ திரைப்படத்தை ரசிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள் ~
சென்னை, 24 மார்ச் 2022: வார இறுதி நாட்களில் பணிச்சுமைகளையும், கவலைகளையும் ஒதுக்கிவிட்டு குடும்பத்தினரோடு சேர்ந்து அமர்ந்து நல்ல திரைப்படத்தைப் பார்த்து ரசிப்பதை விட சிறப்பான பொழுதுபோக்கு ஏதும் இருக்கப்போவதில்லை. இதை உறுதிசெய்வதற்காக தமிழ்நாட்டில் மாபெரும் வளர்ச்சி பெற்றிருக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, அதிரடி வெற்றி பெற்ற ‘கசட தபற’ திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியரின் மூலம் இவ்வார இறுதி நாட்களில் மக்களை மகிழ்விக்க தயாராக இருக்கிறது. இந்த சேனலின் பிரபலமான சண்டே சினி காம்போ என்பதன் ஒரு பகுதியாக மார்ச் 27, வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு இத்திர...
