“காசேதான் கடவுளடா” படப்பிடிப்பு நிறைவு!
ஒரு திரைப்படத்தினை விரைவாக முடிப்பதில் வல்லவராக விளங்கும் இயக்குநர் கண்ணன் மீண்டும் தன் திறமையை நிரூபித்து இப்படத்தில் காட்டியிருக்கிறார். அவரது இயக்கத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும், தமிழின் எவர்கிரீன் காமெடி படமான “காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு முழுதாக நிறைவு பெற்றது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் படப்பிடிப்பிற்கு முன்னதாகவே திட்டமிட்டது போல், பெரும் நடிகர் பட்டாளத்தை வைத்து, ஒரே கட்ட படப்பிடிப்பில் முழுப்படப்பிடிப்பையும் முடித்து சாதித்துள்ளது படக்குழு.
தயாரிப்பாளர், இயக்குநர் கண்ணன் இது குறித்து கூறியதாவது...
எனது முந்தைய சில படங்களின் படப்பிடிப்பை விரைவாக முடித்திருக்கிறேன் ஆனால் “காசேதான் கடவுளடா” முற்றிலும் வேறானது. அனைவரும் முடங்க்கியிருந்த பொது முடக்க காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். இவ்வளவு விரைவாக இப்படத்தை முடிக்க நடிகர்கள் மிர்ச்சி சிவா, பிரி...

