Friday, October 23

Tag: katil-contest

கட்டில் திரைப்படக்குழுவின் கரோனா கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள தேதி நீட்டிப்பு-நடிகை சிருஷ்டி டாங்கே அறிவிப்பு!

News
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த கட்டில் திரைப்படக்குழுவின்  கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியின் விண்ணப்ப தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.   முதல் பரிசு : 25,000 இரண்டாம் பரிசு : 15,000 மூன்றாம் பரிசு : 10,000 ஆறுதல் பரிசு : 20 பேருக்கு கவிதை நூல்கள்.   மற்றும் சிறந்த 100 கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடும் திட்டம்.   நமது மத்திய,மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும் விதமாக கட்டில் திரைப்படக்குழு, "கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி"யை அறிவித்திருக்கிறது. 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்பலாம். தேர்வுக்குழு முடிவே இறுதியானது. ...