அதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் !
“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தின் மொத்த படக்குழுவும் முன் திரையிடல் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பிலும், பாராட்டிலும் பெரும் மகிழ்ச்சியில் உள்ள்னர். படத்தினை பற்றி ஊடகங்கள் அனைத்திலும் வெளிவந்துள்ள நேர்மறையான விமர்சனங்கள் படத்திற்கு பெரும் பலம் சேர்த்து, நிறைய திரையரங்குகளில் படம் வெளியாக காரணமாக அமைந்துள்ளது.
Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இதுகுறித்து கூறியதாவது...
ஒரு அற்புதமான பயணம் “காவல்துறை உங்கள் நண்பன்” படத்தில் எனக்கு அமைந்தது. பல்வேறு இடர்பாடுகளையும், பெரும் தடைகளையும் தாண்டி இப்படம் வெளிவந்துள்ளது. இப்படகுழுவின் அயராத உழைப்பும், ஒன்றினைந்த உற்சாகத்திற்கும் இன்று உரிய பலன் கிடைத்துள்ளது. இந்த நீண்ட பொது முடக்க காலத்திலும் இப்படம் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் என்கிற எண்ணம் என்னுள் ஆழமாக இருந்தது. தியேட்டரில் வெளியாகும்போது கண்டிப்பாக...
