இம்மாதம் 27ஆம் தேதி வெளியாகும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’!
அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் '2 Movie Buff ' நிறுவனம் சார்பில் ரகுநாதன் PS தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.
இப்படத்தில், கயல்' சந்திரமௌலி, சாட்னா டைட்டஸ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், சாம்ஸ், டேணியல் ஆணி போப், அர்ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர்.
SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது.
இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய கயல் சந்திரமெளலி, ‘கயல் படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது ‘ திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ தான். அது எனக்கு எப்படி ஒரு அறிமுக படமாக கிடைத்ததோ, அதேபோல் என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம்.
எதை மூடி காண்பிக்கணுமோ அதை மூடி தான் காட்டணும், எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்து தான் ஆக வேண்டும், எதை காண்பிக்க வேண்டுமோ அதை மட்டு...
