“பென்குயின் ” படம் பற்றி கீர்த்தி சுரேஷ்!
டீஸர் மற்றும் ட்ரெய்லர் மூலமாகவே 'பெண்குயின்' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இதுவரை 30 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது . 'நடிகையர் திலகம்' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், 'பெண்குயின்' படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
தேசிய விருது, இமேஜ் பாதிப்பு, குடும்ப படம், சம்பள குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசியதாவது:
இமேஜ் பாதிப்பு
'பெண்குயின்' படத்தில் இளம் வயது அம்மா கதாபாத்திரம் தானே. கதை கேட்கும் போது, அம்மாவாக கீர்த்தி நடிப்பாரா என்றெல்லாம் இயக்குநர் யோசித்திருக்கலாம். ஆனால், நான் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை. ஏனென்றால் கதை மிகவும் வலுவாக இருந்தது.
நடிக்க தயாரான முறை
கர்ப்பமாக இருக்கும் தாய் கதாபாத்திரம் என்றவுடன் அம்மாவிடம் தான் தொலைபேசியில் பேச...
