ஞானவேல்ராஜா தொடங்கியுள்ள போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோ ஆத்னா ஆர்ட்ஸ்!
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தனது மகள் ஆத்னா பெயரில் தொடங்கியுள்ள உலகத் தரம் வாய்ந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவான ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோ, 2024 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘கங்குவா’ படத்திற்கு நடிகர் சூர்யா இந்த ஸ்டுடியோவில் டப்பிங் பேசியுள்ளதன் மூலம் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது!
நடிகர் சூர்யா வரவிருக்கும் தனது 'கங்குவா' படத்துக்கான டப்பிங்கை பிரபல தயாரிப்பாளரான கே.ஈ ஞானவேல்ராஜா அமைத்த உலகத் தரம் வாய்ந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவான ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோவில் தொடங்கினார். இந்த ஸ்டுடியோவை ஞானவேல்ராஜா தனது மகளின் பெயரில் தொடங்கியுள்ளார்.
திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'கங்குவா’ உள்ளது. இணையற்ற தயாரிப்பு மதிப்பு, திறமையான நடிகர்கள் என படத்தில் ஒவ்வொரு விஷயம் கவனமாகவும் கச்சிதமாகவும் செதுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் நடிகர...

