ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகமாகும் ஸ்டன் சிவாவின் மகன் கெவின் குமார்!
ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகமாகும் ஸ்டன் சிவாவின் மகன் கெவின் குமார்
தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களில் ஒருவர் ஸ்டன் சிவா. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் ஸ்டண்ட் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்து வரும் ஸ்டன் சிவா இன்று தென்னிந்திய திரையுலகில் உள்ள பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் சண்டை காட்சிகளை வடிவமைத்து வருகிறார்.
அதுமட்டுமல்ல ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் வித்தியாசமான முறையில் ரசிகர்கள் விரும்பி ரசிக்கும் வகையிலும், படத்தின் கதை ஓட்டத்திற்கு ஏற்றார்போலவும் வடிவமைப்பதில் வல்லவர்.. சமீபத்தில் வெளியான ருத்ரன், விடுதலை, கஸ்டடி ஆகியவை இவர் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய படங்கள் தான். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ஜெயிலர் படத்திலும் சண்டைக் காட்சிகளை ஸ்டன் சிவா தான் வடிவமைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஸ்டன் சிவாவின் மகன...
