Tag: Kichcha Sudeepa
5 மொழிகளில் வெளியாகும் பயில்வான்!
வழக்கமான வெற்றிகளுடன் திருப்தி அடைந்து அங்கேயே தேங்கி கிடக்கும் கலைஞர்கள் பலர் உள்ளனர். அங்கேயே நின்று விடாமல் உழைக்கும் கலைஞர்களும் பலர் இருக்கிறார்கள். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளை கடந்து தங்கள் நட்சத்திர அந்தஸ்தை அடைவதன் மூலம் அவர்கள் தங்களை வெளிப்படையாக நிரூபித்துள்ளனர். ஆனால் ஒரு சில கலைஞர்கள் மட்டும் வெறுமனே தங்கள் வெற்றியையும் தாண்டி, தங்கள் சினிமாத்துறையை அடுத்த நிலைக்கு உயர்த்துகிறார்கள். கிச்சா சுதீபா அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகராக பல ஆண்டு காலமாக இருந்து வருகிறார். கிச்சாவாக தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர், ராம் கோபால் வர்மாவுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றி பாலிவுட்டிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகராக மாறியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, 'நான் ஈ' படத்தில் வில்லத்தனமான நடிப்பால் வெகுஜன ரசிகர்களையும் கவர்ந்தவர். தற்போது அவர் பயில்வான் என்ற அகில இந்திய படத்தின் மூலம் ம...



