‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்!
உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்
~ வரும் ஞாயிறு அன்று மதியம் 1.30 மணி மற்றும் மாலை 4.30 மணிக்கு
இந்த அதிரடி திரைப்படத்தை பார்க்கத் தவறாதீர்கள்
சென்னை, டிச. 1- தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ், உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக புத்தம் புதிய திரைப்படமான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தை வரும் 5 டிசம்பர், ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.30 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் அதன் ‘சன்டே சினி ஜம்போ’வில் ஒளிபரப்ப உள்ளது.
2021-ம் ஆண்டு வெளியான அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்ற இந்த படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்கி உள்ளார். இதில் கதாநாயகியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் ம...
