நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே ஆர் விஜயா நடிக்கும் “மூத்தகுடி” திரைப்படம்!
The Sparkland நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் “மூத்தகுடி”. நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூத்த நடிகை கே ஆர் விஜயா திரையில் மீண்டும் நடிக்கும் இப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
1970 களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் கதை 1970, 1990 மற்றும் நடப்பு காலகட்டத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் படக்குழு மிகுந்த ஆராய்ச்சி செய்து, அந்தந்த காலகட்டத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவந்துள்ளது. அப்போதைய காலகட்டத்தை மீண்டும் திரையில் பார்க்கும் ஒரு சிறந்த அனுபவமாக இப்படம் இருக்கும்.
மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூத்த நடிகை கே ஆர் விஜயா அவர்கள் இப்படம் ...

