‘கும்பாரி’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் T.குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா நடிக்க, கதாநாயகியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். மேலும் ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார் எஸ்.ஆர்.பிரபாகரன், சரவண சக்தி நடிகர்கள் அப்புக்குட்டி. ஜீவா, ரோபோ சங்கர், பிரஜன், ஜெயிலர் கலையரசன், ராட்சசன் சரவணன் மற்றும் பின்னணி பாடகி மாலதி ஆகியோர் கலந்த...

