“குதிரைவால்” – விமர்சனம்
“குதிரைவால்” - விமர்சனம்
குதிரை வால் - வித்தியாசமன தலைப்பு
மாறுபட்ட கதைக்களம்
வேறுபட்ட திரைக்கதை
புதுமையான அனுபவம்.
தமிழில் இதற்கு முன் வந்த படம் என்று எந்த ஒரு ரெஃபரென்ஸூம் கொடுக்க முடியாத ஒரு படம்தான் குதிரைவால் என ஒரே வரியில் இப்படத்தை விமர்சனம் செய்து விடலாம்.
இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் குதிரைவால்.
இரட்டை இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் இணைந்து இயக்கி உள்ளனர்.
கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்ய கிரிதரன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பிரபல பாடகர் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் காட்சியிலேயே கலையரசன் ஒரு குதிரைவாலோடு உறக்கத்திலிருந்து விழிக்கிறார்.
ஆரம்பக் காட்சியிலிருந்து வால் முளைத்த காரணத்தை தேடி அலைகிறார் கலையரசன். தன் ப...
