SSN எஞ்சினியரிங் கல்லூரி கல்சுரல் விழா வில் ‘குத்துக்கு பத்து’ படக்குழுவினர்!
தமிழக ஓடிடி தளங்களில் தொடர்ந்து சிறந்த தொடர்கள், திரைப்படங்கள், ஒரிஜினல்கள் என வெளியிட்டு பார்வையாளர்களிடையே பாராட்டுக்களை அள்ளிய ஆஹா தமிழ் தளம் சமீபத்தில் யூடுயுப் பிரபலங்களான டெம்பிள் மங்கீஸ் குழுவை வைத்து ‘குத்துக்கு பத்து’ என்ற புதிய தொடர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டது. மே 13ஆம் தேதி ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் வெளியான, ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ இணைய தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் குவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை SSN பொறியியல் கல்லூரியில் நிகழ்ந்த கல்லூரி கல்சுரல் விழாவின் குறும்பட போட்டிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக, குத்துக்கு பத்து குழுவினர் கலந்துகொண்டனர். இந்த கல்லூரி விழாவில், இளம் திறமையாளர்களை ஊக்கபடுத்துவதற்காக, ஆஹா தமிழ் சார்பில் குத்துக்கு பத்து குழுவினர் கலந்துகொண்டு, போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினர்.
திரைப்பட இயக்குநர் விஜய் வரதர...
