பிப்ரவரி 12 வெளியாகிறது “குட்டி ஸ்டோரி” !
எல்லா திரைப்படங்களும் வெளியீட்டின் போது ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் சில படங்கள் படப்பிடிப்பிலிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஆனால் வெகு சில படங்களே படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வெளியீடு வரை பெரும் உற்சாகத்தை அனைவரிடத்திலும் உண்டு செய்யும். அந்த வகையில் Dr. ஐசரி K கணேசன் அவர்களின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் வழங்கும் குட்டி கதை அப்படியானதொரு படைப்பாக உருவாகிறது. தமிழ் மண்ணின் மிகச்சிறந்த இயக்குநர்கள் இணைந்து உருவாக்க, தரமான வகையிலும், விநியோக தளத்தில் லாபம் தரும் வெற்றி படங்களாக தொடர்ந்து தரும், Dr. ஐசரி K கணேசன் தயாரிப்பில் உருவாகும் “குட்டி ஸ்டோரி” இத்தனை எதிர்பார்ப்பை உருவாக்குவது என்பது ஆச்சர்யாமான விஷயம் இல்லை. ஆந்தாலஜி வகை படங்கள் ஒரு புதிய வடிவத்தினை மாற்றனுபவத்தை தருகிறது. சமீபத்திய ஆந்தாலஜி படங்கள் உலகளவில் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவின் பெரும் ...
