Tag: Laabam
லாபம் படத்தின் பர்ஸ்ட் லுக்
எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் லாபம். நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் கலையரசன் சாய் தன்ஷிகா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஸ்ட்ராங்கான கண்டெண்டோடு கமர்சியல் கலந்து உருவாகி வரும் லாபம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று ஆனந்த விகடன் வழங்கும் விகடன் அவார்ட்ஸ் மேடையில் மிகப்பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. ..
உணவு அரசியலும் கலகல கமர்சியலும் சேர்ந்து உருவாகி வரும் இப்படத்தில் புரட்சிகரமான விசயங்களும் பேசப்பட்டுள்ளது. இப்படத்தை 7சி எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் விஜய்சேதுபதி புரோடக்ஷனும் இணைந்து தயாரிக்கின்றன. இமான் இசை அமைத்துள்ள இப்படத்தில் ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டதும்...
விஜய்சேதுபதியின் சொந்தப்படம் ‘லாபம்’
தமிழ்சினிமாவில் சில சமயம் சில படங்கள் அபூர்வங்களை நிகழ்த்தும். அது ஒரு ட்ரெண்ட் செட்டை உண்டு பண்ணும். சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியையும் பெரு மலர்ச்சியையும் ஏற்படுத்தும். அப்படியான படங்கள் உருவாகும் தருணம் எல்லாமே உயரிய தருணம் தான். தற்போது அப்படியொரு தருணம் வாய்த்துள்ளது. ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்ஷனும், நாளு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கின்றன. படத்தின் பெயர் லாபம்.
இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார்.
தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நாயகனாக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் தன...

