IFFI 2019 இந்தியன் பனோரமா பிரிவில் இடம் பிடித்த ஹவுஸ் ஓனர்
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஹவுஸ் ஓனர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சினிமா உலகினரிடையே நல்லதொரு பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. படத்தின் வெளியீட்டின் போது விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்று அனைவரையும் கவர்ந்தது. சென்னை வெள்ளத்தின் தாக்குதல் பின்னணியில் மாட்டிக்கொண்ட முதிய தம்பதியரின் காதலை, அழகோடும் அன்பாகவும் சொன்ன “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என உருவாக்கத்திலும் சிறந்து விளங்கியது. மிகச் சிறந்ததொரு படைப்பாக பாராட்டப்பட்ட இப்படத்திற்கு தற்போது மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. IFFI 2019 உலகத் திரைப்பட திருவிழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதுமாக இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 26 திரைப்படங்களில் ஒன்றாக “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது....
