ராம்கோபால் வர்மா – எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்!
உலகெங்கும் தேவதைக் கதைகளில் உலாவரும் மிகவும் புகழ்பெற்ற பெயர் 'சிண்ட்ரெல்லா' . இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் ஹாரர் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது.
ராய்லட்சுமி பிரதான வேடம் ஏற்றிருக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார் . இவர் மல்டிமீடியா படித்த பெங்களூர்க்காரர் .
சில ஆண்டுகள் எஸ் .ஜே .சூர்யாவிடம் பணிபுரிந்து சினிமா கற்றவர். படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் பேசும் போது,
" இது ஒரு பேய்ப் படம் தான் .ஆனால் பேய்ப் படங்களுக்கு இங்கே போடப்பட்டுள்ள ஹைதர் காலத்து பார்முலாவில் இருந்து விலகி அனைத்து அம்சங்களும் கலந்து ஒரு விறுவிறுப்பான படமாக உருவாகி இருக்கிறது .ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை உடைக்கும் படி இருக்கும். அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரை ஒரு கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு இப்படப் பாத்திரம் எதிர்...
