மக்களைச் சார்ந்த ஒரு சிறிய அரசியல் கருத்தை பேசும் ‘லால் சலாம்’!
லால் சலாம் திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு!
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் மற்றும் தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஆகியோரின் தயாரிப்பில் 'சூப்பர் ஸ்டார்' திரு.ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இவர்கள் நடிப்பில் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் இயக்குனருமான திரு.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் *லால் சலாம்* படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை ஒட்டி திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
*தம்பி ராமையா*
திரு.தம்பி ராமையா பேசும் பொழுது தமிழ்நாட்டிலும் இந்து, முஸ்லீம்,கிறிஸ்துவம் என மதங்கள் மூன்றாக இருக்கலாம், ஆனால் மனித
மனங்கள் ஒன்றாக இருக்கிறது. விஷ்ண...
