“தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மட்டுமல்ல, பீகார் வரைக்கும் மாஸ் ஹீரோ விஷால்தான்” – எஸ்.ஜே.சூர்யா
தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள். அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது :
நடிகர் விஷால் பேசும்போது,
லத்தியால் நான் அடி வாங்கியதில்லை. ஆனால், பீட்டர் ஹெயின் தவிர இந்த படத்தில் அடி வாங்காத ஆள் இல்லை. டீஸரில் 'ஊர்ல இருக்க பொறுக்கி பொறம்போக்கு எல்லாம் என்னை போட்டு தள்ள தாண்டா தேதி குறிச்சீங்க.. இப்ப எவனும் தப்பிக்க முடியாது வாங்கடா' என படத்தில் நான் பேசும் இந்த வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நடிகர் மனோபாலா பேசும்போது
இந்த யூனிபார்மை நான் கிட்டதட்ட 400 படங்களுக்கு ம...
