பெண்களுக்கான வாழ்வியல் பயிற்சி மையம் துவங்கிய இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மகள் மல்லிகா
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள் திருமதி மல்லிகா ரவிக்குமார், பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் நோக்கம் பெண்களுடைய மனதின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாகும். சத்யபாமா பல்கலைக்கழகத்தின் எம்.டி திருமதி மரியா ஜீனா ஜான்சன்., நேச்சுரல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி C.K. குமாரவேல், இந்தியாவின் லைஃப் கோச்சிங் பயிற்சியாளர் புஜா புனீத் மற்றும் Successgyan India வின் நிறுவனர் சுரேந்திரன் ஜெயசேகர் ஆகியோர் இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறுகையில், ‘ஒரு குழந்தை பிறந்தால், அது அழும் போது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த குழந்தை படிப்படியாக, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வளர்வதை பார்த்து, ஒவ்வொரு பெற்றோரும் மகிழ்ச்சியடைகிறார்கள். அதுபோல் இன்று, ஒரு தந்தையாக, எனது குழந்தை மல்லிகா ஒரு சிறந்த திறமையாளராக மாறியதைக் க...
