‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது!
ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்திருக்கிறார். ஜி மதன் படத்தைத் தொகுக்க சண்டைக் காட்சிகளை ஸ்டன்னர் சாம் கவனிக்க, சதீஷ் கிருஷ்ணன் நடனம் அமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் 'லிஃப்ட்' படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி வினீத் வரபிரசாத் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று இப்படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ட்ராக் வெளியாகி இருக்கிறது. பாடலாசிரியர் ஆர் நிஷாந்த் எழுதியிருக்கும்...
