Friday, October 23

Tag: LIGER saala Crossbreed

பன்மொழி படமாக உருவாகும் LIGER ( saala Crossbreed )

பன்மொழி படமாக உருவாகும் LIGER ( saala Crossbreed )

News
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான LIGER ( saala Crossbreed ) படத்தின் புதிய மாஸ் டான்ஸ் பாடல் காட்சி, மும்பையில் படமாகிறது! தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை கமர்ஷியல் கிங் இயக்குநராக புகழப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இப்படம் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆக்சன் படமாக மட்டுமல்லாமல், கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகிவருகிறது. விஜய் தேவரகொண்டா தனது முந்தைய படங்களில், பாடல்களில் பெரிதாக நடனமாடவில்லை. அவரது நடன திறமையை வெளிப்படுத்தும் வகையிலான கதைகள் அப்படங்களில் இல்லை. ஆனால் இந்த Liger திரைப்படத்தில், உங்களையெல்லாம் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்படி, அட்டகாசமான நடனத்தை வெளிப்படுத்தவுள்ளார்...