லோக்கல் சரக்கு விமர்சனம்!
லோக்கல் சரக்கு விமர்சனம்!
அடிக்கிறது பூராமே லோக்கல் சரக்கு தானேய்யா... வெளிநாட்டு சரக்கா நெதமும் அடிக்கிறோம்....
சரக்கு விற்பனையை பிரதானமாகக் கொண்டு இயங்கும் ஒரு மாநிலத்தில் சரக்குக்கு எதிராக படம் எடுப்பதும் அதை வெளியிடுவதற்கும் பெரிய தைரியம் வேண்டும்.
அந்த தைரியம் லோக்கல் சரக்கு தயாரிப்பாளர் வராஹ சுவாமி பிலிம்ஸ் கே. வினோத் குமாருக்கு நிறையவே இருக்கும் போலிருக்கிறது.
சம்பாதித்து நாலு காசு சேர்த்து தங்கையை கல்யாணம் செய்து கொடுத்து மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளும் அண்ணன்கள் வாழ்ந்தது அந்தக் காலம்.
தங்கை வருமானத்தில் சரக்கு அடிக்க காசு வாங்கி சகாவோடு அடிப்பது இந்த காலம்.
தங்கையிடம் காசு வாங்கி குடிக்கும் அண்ணனாக நடன இயக்குனர் தினேஷ், கெட்ட பெயர் கிடைக்கும் என்று தெரிந்தும் இந்த பாத்திரம் மூலம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
வழக்கம் ப...
