Friday, October 23

Tag: Locker

விறுவிறுப்பான ராபரி திரில்லர் ‘லாக்கர்’!

விறுவிறுப்பான ராபரி திரில்லர் ‘லாக்கர்’!

News
  படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டத்தின் நடுவே தான் மட்டுமே ஒரு பெண்ணாக நடித்தது குறித்து லாக்கர் பட நாயகி நிரஞ்சனி வெளிப்படையாகப் பேசினார். தமிழில நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து 'லாக்கர் 'என்றொரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள்.இவர்கள் இருவருமே சினிமாவின் மீது தீராதகாதல் கொண்டவர்கள். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே இறுதிப்பக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.எதற்கும் துணிந்தவன் , கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும் மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்பவர். கள்ளச்சிரிப்பு என்ற ஜீ5க்கான இணைய தொடரிலும் நடித்துள்ளார். கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். இவர் சில பைல...