‘லாக்’ படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி பரபரப்பானது!
ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'லாக்'!
'அட்டு' படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்காவின் அடுத்த பிரமாண்ட படைப்பான 'லாக் ' படத்தின் பஸ்ட் லுக் இன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ரத்தன் லிங்கா . பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் , RPG ராயல் பினோபென் குழு , சக்திவேல் பிக்சர்ஸ், ஆகிய நிறுவனங்கள் இணைந்து ' லாக்' திரைப்படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளன.
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கனவு உண்டு. அதை நோக்கிய பயணத்தையே அவர்கள் வாழ்க்கையாக வாழ்கிறார்கள் .சிலருக்கு அந்தக் கனவுகள் பலிக்கின்றன. சிலருக்குப் பாதிதான் நிறைவேறுகின்றன. சிலருக்குக் கனவுகள் தொடக்கத்திலேயே கருகிப் போய் விடுகின்றன.
இந்த சமுதாயத்தில் நாம் பழகும் மனிதர்கள் நல்லவர்களா ?கெட்டவர்களா? என்பதை நாம்தான் கண்டறிய வேண்டும். ஏனெனில் இந்த ...
