‘காதலர் தினம்’ அன்று நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு ஒரு படம்!
மனித இனம் தோன்றிய காலம் முதல் மனிதர்களுக்கு முக்கியமானவை மண்ணும் பெண்ணும் தான். நிலத்தை கூட எளிதில் பெற்றிடலாம், பெண்ணின் மனம் மெல்லியதானது, அதை அடைய வேண்டுமெனில் அவளை காதலித்து மனந்தால் தான் முடியும். காதலித்துதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வம்சத்தில் பிறந்த கடைசி வாரிசுதான் கதாநாயகன், தன் இலட்சியத்தை எப்படி அடைகிறான் என்பதை பற்றிய கதைதான் “ஆர். ஜி மீடியா தயாரிக்கும் ராபின்சன் வழங்கும் கடலை போட பொண்ணு வேணும்” திரைப்படம்.
“என் படத்தின் கதாநாயகனாக நடிக்கும் அசார், சென்னைக்கு கடலைப் போட்டு காதல் செய்வதற்காக கதாநாயகியை தேடி வரும் இளைஞனாக நடித்துள்ளார். காதலின் அடிப்படையே கடலைப் போட்டு கல்யாணம் செய்வதுதான் என்பதே கதையின் மையம். காதல் என்பதே புரிதல் தான், இதை தான் கடலை என்று விவரிக்கிறோம். என்னுடைய கதாநாயகன் காதலியை கண்டறிந்தாரா? கடலை போட்ட...
