Friday, October 23

Tag: London for the premiere of Citadel

சீட்டடெல் பிரீமியர் காட்சிக்காக உலகெங்கிலுமிருந்து லண்டனில் ஒன்று சேரும் ஒற்றர்கள்!

News
அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ருஸ்ஸோ பிரதர்ஸின் AGBO வழங்கும் கிரவுண்ட்பிரேக்கிங் தொடரான சீட்டடெல் பிரீமியர் காட்சிக்காக உலகெங்கிலுமிருந்து ஒற்றர்கள் லண்டனில் ஒன்று சேர்க்கின்றனர். ஏப்ரல் 28 ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஒரு பிரமாண்டமான உலக அரங்கேற்றத்திற்கு அமேசான் ஒரிஜினல் தொடர் சீட்டடெல் இன் ஒற்றர்கள் தயாராகி வரும் நிலையில், முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா, ஜோனாஸ் மற்றும் ஸ்டான்லி துச்சி, லெஸ்லி மான்வில்லே ஆகியோர் தங்களது உலகளாவிய சுற்றுப்பயணத்தின் நடுவே நிர்வாக தயாரிப்பாளர்களான ஜோ மற்றும் அந்தோனி ருஸ்ஸோ மற்றும் ஷோ ரன்னர், டேவிட் வெயில் ஆகியோருடன் இணைந்து லண்டன் பிரீமியரில் பங்கு பெற்றனர். அதிரடிக் காட்சிகள் நிறைந்த ஸ்பை யூனிவர்சின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகளான ராஜ் & டிகே மற்றும் சீட்டடெல் இந்திய வெளியீட்டின் இணை எழுத்தாளர் சீ...