Tuesday, September 29

Tag: Lover review

லவ்வர் _ விமர்சனம்

லவ்வர் _ விமர்சனம்

Reviews
அருண் - திவ்யா காதலர்கள். அருணுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. தவிர, சொந்தமாக பிஸினஸ் செய்கிறேன் பேர்வழி என்று தனது அம்மாவின் பணத்தை அழித்துவிடுகிறார். வேறு இடத்தில் வேலைக்குப் போகவும் ஈகோ தடுக்கிறது. திவ்யா, ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவரை, தான் சொல்கிறபடிதான் நடக்க வேண்டும் என ஆணாதிக்கம் செலுத்துகிறார் அருண். இதனால் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினையை அழகாக சொல்லியிருக்கிறார்கள். நாயகன் அருணாக மணிகண்டன் நடித்து இருக்கிறார். ஈகோ – ஆணாதிக்கம் பிடித்த இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். “அவ என் காதலி இல்லே.. என் பொண்டாட்டி… அவ எப்படி இன்னொருத்தன்கூட அதிக நேரம் பேசலாம்” என்றெல்லாம் அவர் வெடிக்கும்போது, அச்சு அசலாக ஆணாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்துகிறார். நாயகி திவ்யாவாக, ஸ்ரீகெளரி பிரியா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். காதலன் மீது வைக்கும் அன்பு, அதே நேரம் அவனது அடக்குமுறை பிடி...