Saturday, August 29

Tag: maanaadu movie

சிம்பு  நடிக்கும் ‘மாநாடு’ படப்பிடிப்பு மலேசியாவில் துவங்குகிறது!

சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படப்பிடிப்பு மலேசியாவில் துவங்குகிறது!

News
அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு டைரக்சனில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.   கதாநாயகியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.. இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர்.. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.   முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப்படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த படம் அறிவிக்கப்பட்டு பல...