மாநாடு படப்பிடிப்புக்கு சிம்பு தாமதமாக வருகிறாரா? – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டிருக்கும் அறி்க்கை
அனைத்து பத்திரிகை நண்பர்களிடமும் ரொம்ப நெருக்கமாக எனது குடும்பம் போலவுமே பழகி வருகிறேன். யாருடைய அழைப்பையும் தவிர்த்ததில்லை.
மற்றவர்கள் தன் படம் பற்றி ஒளித்துவைக்கும் செய்திகளைக் கூட நான் ஒளித்து வைப்பதில்லை.
அழைத்துக் கேட்டால் ஆமா, இல்லை... என்பதை உள்ளபடியே சொல்லிவிடுவேன்.
அதனால் என் படத்திற்கு சாதகமான விசயங்களே நடந்திருக்கின்றன. எனது பி ஆர் ஓ வும் அப்படியே. செய்தியாளர்களின் முக்கியத்துவத்தை தவிர்த்ததே இல்லை.
பெரிய படங்கள் செய்வது சாதாரணமல்ல. ஒருங்கிணைப்பு வேலைகள் அதிகம் இருக்கும். இதில் ஒரு சில சக நண்பர்களின் பொறாமைப் பார்வையும் இருக்கும்.
அப்படியான யாரோ ஒரு இன்ஃப்ளூயண்ஸ்ட் பெர்ஸன் நம் மாநாடு படத்தின் மீது வெறுப்பை உமிழ பத்திரிகைகளில் அவருக்கு இருக்கும் பலத்தைப் பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகிறார்.
ஒரு பத்திரிகையில் சிம்பு படப்பிடிப்பிற்கு 16வது நாளிலிருந்து தாமதமாக வரு...
